இலங்கையின் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்கள் செப்டம்பர் 8 இல் இடம்பெறும்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூலை 19, 2012

இலங்கையில் அண்மையில் கிழக்கு, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய இன்று நண்பகல் இந்த அறிவிப்பை ஊடகங்களுக்கு விடுத்தார்.


இதேவேளை, இந்த மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. மூன்று மாகாண சபைகளிலும் 108 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3073 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.


கிழக்கு மாகாண சபையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேர், அம்பாறையில் 14 பேர், திருகோணமலையில் 10 பேர் உட்பட மொத்தம் 37 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.


கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் (த.அ.க), கோவிந்தன் கருணாகரம் (டெலொ), கதிர்காமாத்தம்பி குருநாதன் (த. அ.க), இராசையா துரைரெத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்), இரத்தினசிங்கம் மகேந்திரன் (த.அ.க), இந்திரகுமார் நித்தியானந்தம் (டெலோ), சோமசுந்தரம் யோகானந்தராசா (த.அ.க), கிருஸ்ணபிள்ளை சேயோன் (த.அ.க), சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் (த.அ.க), மார்கண்டு நடராசா (த.அ.க), பழனித்தம்பி குணசேகரன் (த.அ.க.), ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (த.வி.கூ), தங்கராசா மனோகரராசா (புளொட்), பரசுராமன் சிவனேசன் (த.அ.க)ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்), அமீர்அலி சயிப்டீன், அலிஸாகீர் மௌலானா செயிட், நாகலிங்கம் திரவியம், எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கணபதிப்பிள்ளை மோகன், விநாயகமூர்த்தி சிறிதரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன், பிரோவ் கன்டி, அப்துல் செறீப் சுபைர், ஏ.எப்.எம்.சிப்லி, எம்.எச்.எம்.ஹக்கீம், ராஜநாதன் மயில்வாகனம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கல்வி நிபுணத்துவ ஆலோசகர் சி. தண்டாயுதபாணி முதன்மை வேட்பாளராக போட்டியிடுகிறார். ஏனையோர்: க.கோணேஸ்வரன், இந்திராணி தர்மராஜா, எஸ்.அந்தோனிப்பிள்ளை, எம்.எஸ்.பளீல் புல்மோட்டை, க.நாகேஸ்வரன், எஸ்.விஜயகாந்த், க.வியஜரெட்ணம், க.ஜனார்த்தனன், வெ.சுரேஷ், ராஜரட்ணம் ரட்னகுமார், ந.குமணன், க.நித்தியானந்தம்.


மூலம்

தொகு