இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொகான் பீரிசு பொறுப்பேற்றுக் கொண்டார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், சனவரி 16, 2013

இலங்கையின் 44வது தலைமை நீதியரசராக மொகான் பீரிசு நேற்றுக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் ஆலோசகரும் ஆவார்.


இலங்கை முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவைப் பதவி நீக்கம் செய்யும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதனை அடுத்து அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச உடனடியாகவே அமுலுக்கு வரும் வகையில் இவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார்.


இதே வேளை ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பு, புதிய தலைமை நீதியரசராக மொகான் பீரிசு சட்டமா அதிபராக இருந்த காலத்தில் இலஞ்ச முறைகேடு சம்பவம் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டி முறைப்பாடு ஒன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.


மூலம்

தொகு