இலங்கையின் நியமநேரம் அறிவிப்பு

செவ்வாய், ஏப்பிரல் 12, 2011

இலங்கையின் நியமநேரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது. தேசிய நியமங்களுக்கமைய இந்நேரம் 2011.04.07ஆம் திகதிய இலக்கம் 1700/18 உடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கை நியம நேரம், சர்வதேச நியம நேரத்திலும் பார்க்க 5:30 மணி நேரம் முன்னோக்கி காணப்படுகின்றது. முதற்கட்டமாக இணையத்தளம் ஊடாக இலங்கையின் நியமநேரம் வெளியிடப்படுவதுடன், நேரம் தொடர்பான தேசிய தரமாகக் காணப்படும் உருபிடியம் அணு கடிகாரத்தின் நேரம் இணையத்தளம் ஊடாக வெளியிடப்படும். இலங்கையின் அதிகாரபூர்வ நேரம் பற்றிய விபரங்களை www.sltime.org என்ற இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம் தொகு