இந்திய அரசியல் வாதி ஜோதி பாசு காலமானார்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

ஞாயிறு, சனவரி 17, 2010

இந்திய அரசியலில் முக்கியமான பங்கு வகித்துவந்தவரும் முன்னாள் வங்க தேச முதல் அமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஜோதி பாசு காலமானார்.


1914 இல் வங்க தேசத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜோதி பாசுவின் தந்தை ஒரு வைத்தியர் என்பதுடன் அவரின் சொந்தப் பிரதேசம் தற்போதய வங்கதேசமாகும்.


இவர் மூலம் ஏழை விவசாயிகள் பலர் நிலங்களைப் பெற்றதுடன் வங்க தேசத்தில் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தினார் என்று கூறப்படுகின்றது. ஆயினும் தொழிற் சங்கங்களின் அழுத்தங்களிற்கு அடி பணிந்து வேளிநாட்டு முதலீடுகள் மூலம் உள்நாட்டு கைத்தொழிலை புத்துயிரூட்டத் தவறினார் என்றும் இவர் மேல் குற்றங்கள் உள்ளது..


1996 இல் இந்திய பிரதம மந்திரியாக பொறுப் பேற்கும் வாய்ப்பு இருந்த போதும் இவரது கட்சி கூட்டமைப்பிற்கு வெளியே இருந்து ஆதரவு வழங்குவதாக முடிவெடுத்த காரணத்தால் இந்தப் பதவியை பெறும் வாய்ப்பை ஜோதி பாசு இழந்தார்.

மூலம்

தொகு