இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
வியாழன், திசம்பர் 26, 2024
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது.
5,000 கிமீ (3,100 மைல்) இக்கு மேல் செல்லும் அக்னி-5 1.5 டன் எடையுள்ள அணுகுண்டை சுமந்து செல்லக்கூடியது. இது முதன்முதலாக 2012ஆம் ஆண்டு சோதித்து பார்க்கப்பட்டது. இரண்டாவது சோதனை 2013 இலும் மூன்றாவது சோதனை 2015 இலும் நடந்தது.
இது பெரும்பான்மையான சீனாவை தாக்கும் வல்லமை கொண்டது. இதன் சிறப்பு என்னவெனில் இது டாட்ரா என்னும் சுமையுந்தில் இருந்து ஏவப்பட்டது. இதனால் அக்னி-5 ஐ நகரத்தின் ஓரத்திலிருந்து செலுத்தமுடியும். இந்த ஏவுகணை 50 டன் எடையுடையது, 17 மீட்டர் நீளமுடையது, 2 மீட்டர் தடிமன் (சுற்றளவு) உடையது. மூன்று அடுக்குகளை உடைய இது திட எரிபொருளால் செல்லும்.
அக்னி-1 700 கிமீ உம் அக்னி-2 2,000 கிமீ உம் அக்னி-3 3,000 கிமீ உம் அக்னி-4 4,000 கிமீ உம் செல்லக்கூடிய ஏவுகணைகளை இந்தியா வைத்துள்ளது. இலக்கை மிக துல்லியமாக அடைய உதவும் சீரோளி சுழல் காட்டி தொழில்நுட்பத்தில் இயங்கும் உட்புற இடமறியும் அமைப்பு இதில் உள்ளது மட்டுமல்லாமல் நுண்ணிய இடமறியும் அமைப்பும் இதில் உள்ளது. அதனால் ஏவுகணை இலக்கை சில மீட்டர் துல்லியத்தில் தாக்கமுடியும்.
இதுவே இறுதி சோதனை என்று கருதப்படுகிறது. ஆனால் இராணுவத்திடம் ஒப்படைக்கும் முன் அவர்களை கொண்டு சில சோதனைகள் நடத்தப்படும்.
மூலம்
தொகு- India conducts fourth test launch of Agni-V missile பிபிசி 26 டிசம்பர் 2016
- India test launches Agni-V long-range missile பிபிசி 19 ஏப்பரல் 2012
- Agni 5 test launch successful! How India’s grand missile strategy to counter China is falling in place பைனான்சியல் எக்சுபிரசு 26 டிசம்பர் 2016
- India successfully test-fires most lethal missile Agni-V டெக்கான் எரால்டு 26 டிசம்பர் 2016
- Agni-V successfully soars yet again இந்து 26 டிசம்பர் 2016