இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை வருகை

வெள்ளி, சனவரி 20, 2012

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் புகழ்பெற்ற அணுவியல் அறிவியலாளருமான டாக்டர் அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார். நாளை 21ஆம் திகதி இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச தலைமையில் நடைபெறும் மும்மொழித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறார்.


படிமம்:AbdulKalam.JPG
டாக்டர் அப்துல் கலாம்

எதிர்வரும் 22ஆம் திகதி மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இலங்கை அறிவியலாளர்கள், பொறியியலாளர்கள், துறைசார் வல்லுனர்களுக்கான செயலமர்விலும் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.


"அப்துல் கலாமிடம் காணப்படும் சிறந்த அறிவினைப் பயன்படுத்துவதற்கு எமக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார்.


திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் அப்துல் கலாம் அங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரை நிகழ்த்தவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் செல்லவிடுப்பதுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.


மூலம் தொகு