ஆற்றல் வாய்ந்த வானொலித் தொலைநோக்கி ஆத்திரேலியாவில் நிறுவப்பட்டது
வெள்ளி, அக்டோபர் 5, 2012
- 17 பெப்ரவரி 2025: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்
- 17 பெப்ரவரி 2025: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
உலகின் ஆற்றல் மிக்க அதிவேகமான தொலைநோக்கிகளில் ஒன்றை ஆத்திரேலியா அமைத்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் விண்மீன்கள் மற்றும் விண்மீன்திரள்களின் பூர்வீகத்தைக் கணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆத்திரேலியாவில் உள்ள ஜெரால்ட்டன் நகரில் இருந்து 315 கிமீ தூரத்தில் உள்ள பாலைவனப் பகுதி ஒன்றில் நிறுவப்பட்டிருக்கும் ஆஸ்காப் (Askap) என அழைக்கப்படும் இத்தொலைநோக்கி அணியில் 36 வானலைவாங்கிகள் ஒவ்வொன்றும் 12 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
$155 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்தொலைநோக்கி இன்று வெள்ளிக்கிழமை முதல் செயல்பட ஆரம்பிக்கும். தற்போதுள்ள தொலைநோக்கிகளை விட மிக வேகமாக இத்தொலைநோக்கி வானை ஆய்வு செய்யும் எனக் கூறப்படுகிறது. கருந்துளைகளை ஆராய்வது இத்தொலைநோக்கியின் ஒரு முக்கிய திட்டமாகும்.
ஆஸ்காப் என்பது சதுர கிலோமீட்டர் அணி (SKA) என்ற பெரும் தொலைநோக்கியின் ஒரு பகுதியாகும். இப்பெருந்தொலைநோக்கி 2016 ஆம் ஆண்டில் நிறுவப்படவிருக்கிறது.
தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அமையவிருக்கும் சகிஅ (SKA) தொலைநோக்கி உலகின் மிகப்பெரும் தொலைநோக்கியாகவிருக்கும்.
மூலம்
தொகு- Australia unveils powerful radio telescope, பிபிசி, அக்டோபர் 5, 2012
- Mighty telescope begins scouring universe, தி ஏஜ், அக்டோபர் 5, 2012