ஆந்திரா கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 16 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, சனவரி 31, 2010


இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்த்தில் 16 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களில் நால்வர் பெண்கள், நால்வர் குழந்தைகள்.


நேற்றுக் காலை 07:00 மணியளவில் விஜயவாடாவில் இருந்து 190 கிமீ தூரத்தில் உள்ள பிய்யபுத்தெப்பா என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மொத்தம் 80 பேரை ஏற்றிக் கொண்டு அந்தர்வேடி என்னுமிடத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சென்ற படகே கோதாவரி ஆற்றின் உப்படெரு கால்வாய் அருகே திடீரென மூழ்கியது. அந்த ஊர் மக்கள் 44 பேரைக் காப்பாற்றினர்.


இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன எனக் காவ்ல்துறையினர் தெரிவித்தனர். மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இப்படகில் சென்றவர்களில் பெரும்பான்மையானோர் கோயில் தெருவிழாவுக்குச் சென்ற மீனவர்கள் ஆவர்.


அளவுக்கு அதிகமான பேர் பயணம் செய்ததால் தான் படகு கவிழ்ந்துள்ளது என்று மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மூழ்குவதற்கு முன்னர் இப்படகு வேறொரு வெற்றுப் படகில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம் தொகு