ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
சனி, திசம்பர் 28, 2013
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 28 மே 2015: இந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது
- 28 திசம்பர் 2013: ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
- 31 அக்டோபர் 2013: ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு
- 31 சூலை 2013: இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு
- 22 பெப்பிரவரி 2013: இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் அமைவிடம்
தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தொடருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில் இரு சிறுவர்கள் உட்படக் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
மகாராட்டிராவின் நான்டெட் நகரில் இருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த விரைவுத் தொடருந்தின் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றே இன்று அதிகாலை 3:30 மணியளவில் தீப்பிடித்தது. இப்பெட்டியில் சுமார் 60 பேர் வரை பயணம் செய்து கொண்டிருந்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு சூலை மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற விரைவுத் தொடருந்து ஒன்று ஆந்திரப் பிரதேசத்தில் தீப்பற்றியதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
தொகு- India train fire 'kills 23' in Andhra Pradesh state, பிபிசி, டிசம்பர் 28, 2013
- Fire on Indian train kills at least 23, டெய்லி மிரர், டிசம்பர் 28, 2013