ஆண்டிறுதியில் இந்தியாவில் 3ஜி சேவை: வோடாபோன் அறிவிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், சூலை 28, 2010

வொடாபோன் தொலைபேசி

வோடாபோன் நிறுவனம் 2010 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 3ஜி சேவைகளை ஏவயிருப்பதாக அந்த நிறுவன மேல் அதிகாரியொருவர் கூறினார்.


அடுத்த ஆண்டின் முதற் காற்பருவத்தில் பரந்த 3ஜி சேவைகள் அளிக்கப்படும் என்று அவர் சேர்த்தார்.


"ஒன்பது சுற்றங்களில் 3 ஜி சேவையை இந்த ஆண்டின் இறுதியில் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். நிறமாலை நிர்ணயிப்பதற்காக காத்திருக்கிறோம். நிறமாலை கிடைத்த உடனே நாங்கள் 3 ஜி சேவையை எவுவதாய் இருக்கிறோம்," என்று வோடாபோன் ஏசர் தலைமை செயல் அலுவலர் மற்றும் மேலாட்சி இயக்குனர் மார்டேன் பீட்டர்ஸ் இன்று செய்தியாளர்களுக்கு கூறினார்.


வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது. அந்த சுற்றம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தமிழ் நாடு, மகாராசுத்திரா மற்றும் கோவா, குசராத், கரியானா, உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது.

மூலம்

தொகு