அலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது
வெள்ளி, திசம்பர் 13, 2024
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 25 திசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 13 திசம்பர் 2016: அலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது
- 14 மார்ச்சு 2016: சிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு
- 25 நவம்பர் 2015: உருசியப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது
அலெப்போ நகரின் கிழ புறத்தை விட்டு கிளர்ச்சியாளர்கள் முழுவதும் வெளியேறியதை தொடர்ந்து அந்நகரம் சிரிய இராணுவத்தின் வசமாகியது. அலெப்போ நகரின் மேற்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டிலும் கிழ புறம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தன.
கிழ புறத்தை பிடிக்க இராணுவம் இரசிய வான் படை உதவியுடனும் ஈரானிய உதவியுடனும் இசுபுல்லா சியா கிளர்ச்சியாளர்களை கொண்டும் தீவிர தாக்குதல் நடத்தியது.
அலெப்போ சிரியாவின் மிகப்பெரிய நகராகவும் அதன் வணிக தலைநகராகவும் இருந்தது. உள்நாட்டு போரினால் அலெப்போ கடும் சேதமுற்றதுடன் அதன் மக்களில் பெரும்பாலோர் வெளியேறி விட்டனர்.
கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய அரசுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அலெப்போ நகரின் கிழ புறத்தில் இருந்த சில கிளர்ச்சியாளர்களும் வெளியேறினர். கிளர்ச்சியாளர்களும் அவர்கள் இருந்த பகுதி மக்களும் பாதுகாப்பாக வெளியேற இவ்வுடன்பாடு வழி செய்கிறது. அவர்கள் திட்டமிட்டப்படி இட்லிப் நகருக்கு செல்வார்கள் என்றும் அவர்களை துருக்கி ஏற்பதாக திட்டம் இல்லை என்று துருக்கி அதிகாரி கூறினார்.
ஐநா அலெப்போவில் நடந்த அவலங்களுக்கு சிரிய அரசும் அதன் கூட்டாளிகளான இரசியாவும் ஈரானும் தான் காரணம் என்று கூறியுள்ளது.
மூலம்
தொகு- Aleppo battle ends as Syria rebel deal reached பிபிசி 13 டிசம்பர் 2016
- Syria rebels reach evacuation deal with government அல்கசீரா 13 டிசம்பர் 2016