அமெரிக்கா மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான தனது தூதரகத்தை மூடியது

வெள்ளி, திசம்பர் 28, 2012

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

Flag of the Central African Republic.svg

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் போராளிக் குழுக்கள் தலைநகர் பங்கூயி நகரை நோக்கி முன்னேறி வருவதை அடுத்து அங்கிருந்த தனது தூதரகத்தை மூடியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.


மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுடனான தூதரக உறவுகளைத் தாம் முறித்து விடவில்லை என்று கூறியுள்ள அமெரிக்க அரசுப் பேச்சாளர், நாட்டில் குழப்ப நிலை நிலவும் சூழலில் அந்நாட்டிற்கு அமெரிக்கர்களைச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.


முன்னதாக, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே போராளிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா, மற்றும் பிரான்சின் உதவிகளைக் கோருவதாக அறிவித்தார்.


அத்தியாவசியமற்ற சேவைகளை வழங்கி வரும் ஐநா ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய நாடுகள் கோரியுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான பம்பாரியை போராளிகள் கைப்பற்றியிருந்தனர். அதற்கு முன்பதாக கனிம வளம் நிறைந்த ப்ரியா என்ற நகரைப் போராளிகள் கைப்பற்றியிருந்தனர்.


மூலம்தொகு