மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுப் போராளிகளை அடக்க சாட் தனது படையினரை அனுப்பியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், திசம்பர் 19, 2012

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ப்ரியா என்ற வைரம்-மிகுந்த நகரை போராளிகள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டுக்கு அயல் நாடான சாட் தனது படையினரை நேற்று அனுப்பியுள்ளது.


மத்திய ஆப்பிரிக்கக் குடியரசும் அதன் அயல் நாடுகளும்

தமது இராணுவத்தினரால் போராளிகளை அடக்க முடியாமல் போனதை அடுத்து மத்திய ஆப்பிரிகக்க் குடியரசின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசிசே அயல் நாடான சாட்டிடம் இருந்து இராணுவ உதவியைக் கோரியுள்ளார். போராளிகளுடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


2007 ஆம் ஆண்டில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையை பொசிசே சரிவர நடைமுறைப்படுத்தவில்லை எனப் போராளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2007 உடன்படிக்கையின் படி போராளிகள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். ஆனாலும் பல போராஅளிகள் இராணுவத்தில் இருந்து தப்பி அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.


1960 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பல முறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளானது. இதன் மூலம் அயல் நாடான சாட் பல முறை இந்நாட்டின் அரசியலில் நேரடியாகத் தலையிட வேண்டி வந்தது. 2003 ஆம் ஆண்டில் பொசிசே இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சாட் நாடு பல வழிகளில் உதவியது. பின்னர் 2005, 2011 தேர்தல்களில் வெற்றியீட்டினார்.


ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு தங்கம், மற்றும் வைரம் போன்ற கனிமப்பொருட்கள் மிகுந்த நாடாகும்.


மூலம்

தொகு