அமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகை
வெள்ளி, சனவரி 31, 2014
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்துள்ளார்.
கொழும்பை வந்தடைந்துள்ள அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 2 வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளுடனும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
இலங்கை வந்துள்ள நிசா பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள வட மாகாண முதலமைச்சர், மகாணசபை மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீர்மானித்து செயலாற்றி வருகின்றது. அதனொரு கட்டமாகவே நிசா பிசுவாலின் இலங்கைப் பயணமும் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மூலம்
தொகு- இலங்கைப் பயணத்தின் பின்னர் ஜெனிவா விரைகிறார் பிஸ்வால், சனவரி 30, 2014
- அமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வந்தார்; யாழ்ப்பாணத்திற்கும் செல்கிறார், தமிழ்மீடியா, சனவரி 31, 2014
- Nisha Biswal arrives, டெய்லிமிரர், சனவரி 31, 2014