அசாமில் பயணிகள் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
செவ்வாய், மே 1, 2012
அசாமில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் தேர்தல் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: இந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
- 17 பெப்ரவரி 2025: இந்தியப் பொதுத் தேர்தல் 2014: முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
- 17 பெப்ரவரி 2025: அசாமில் பயணிகள் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: கேரளம், அசாம் மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி
இந்தியாவில் அசாமின் அமைவிடம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் நேற்று திங்கட்கிழமை பயணிகள் படகொன்று மூழ்கியதில் குறைந்தது 103 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
150 பேர் வரையில் உயிருடன் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அசாம் மாநில முதல்வர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அசாமின் குவகாத்தி நகரில் இருந்து 350 கிமீ மேற்கே தூப்ரி மாவட்டத்தில் இந்த விபத்து நேரிட்டது. படகு புயலில் சிக்கி இரண்டாகப் பிளவுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் உயிர்காப்புப் படகோ அல்லது மிதவை அங்கிகளோ இருக்கவில்லை எனவும், அளவுக்கதிகமான பயணிகளை அது ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மூலம்
தொகு- Search for survivors after India ferry sinking, பிபிசி, மே 1, 2012
- Capsized Indian ferry deaths feared in hundreds, சிபிசி, மே 1, 2012