2015 சென்னை பேரழிவு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.


வியாழன், திசம்பர் 10, 2015

தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும் மழை பொழிந்து மிகப்பெரிய இயற்கை பேரழிவு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நிகழ்ந்தது. இந்த பேரழிவின் விளைவாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் தென்னிந்திய மாநிலங்களில் கோரமண்டல் கடற்கரைப் பகுதி, மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி ஒன்றியப் பகுதி, குறிப்பாக சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் 18 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த மழையின் காரணம் எல் நினோ என்ற புவியியல் மாற்றத்தால் இவ்வெள்ளங்கள் ஏற்பட்டதெனக் கூறப்படுகிறது.

சென்னை பாலம்

அடையாறு செம்பரம்பாக்கம் ஏரியில் டிசம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரம் கன அடி நீர் செம்பரம்பாக்கம் அணையில் இருந்து அடையாற்றில் விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடும் வெள்ளம் அடையாற்றில் ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் தண்ணீருக்குள் மூழ்கியன. போக்குவரத்து நிறுத்தப்பட்டன .தண்ணீருக்குள் மூழ்கிய பிரதான பாலங்கள் சைதாப்பேட்டை பாலம் மற்றும் ஈக்காட்டுத் தாங்கல் பாலம். ஆற்றின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் நுழைந்தது. குடிசைகள் பல அடித்துச் செல்லப்பட்டன.

பல மக்கள் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.அந்த பகுதியில் வாழும் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை இழந்துவிட்டனர்.வெள்ளம் வந்த பின்னர் நெகிழிப் பொருட்கள் இடங்களில் முழுவதும் சிதறிக்கிடந்தன.இந்த நிகழ்வு சுற்றுப்புற சூழல் பாதிப்பை காட்டுகிறது.

ஆவடி அருகே நீர் வேகமான ஓட்டம் காரணமாக பாலம் ஒன்று உடைந்தது. தரை பாலங்கள் பல மூழ்கியது. தி.நகர் சுரங்கப்பாதை, கிண்டி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து எல்லா ரயில்களும் டிசம்பர் 1 முதல் ரத்து செய்யப்பட்டது. டிசம்பர் 7 முதல் ரயில் சேவை வழக்கமான இருந்தது.

ஓடுபாதை வெள்ளம் காரணமாக விமான சேவை டிசம்பர் 2 முதல் இருந்து டிசம்பர் 7 வரை ரத்து செய்யப்பட்டன. அரக்கோணம் கடற்படை விமானத் தளம் பயணிகள் பொது விமான நிலையமாக தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டது. டிசம்பர் 6இல் இருந்து உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது. டிசம்பர் 7முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கியது.

சென்னை விமான நிலையம்

நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெள்ளம் காரணமாக மின் வெட்டு இருந்தது.அதற்கு பிறகுடிசம்பர் முதல் வாரத்தில் இருந்து, பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு இருந்தது.

சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக அலைபேசி கோபுரம் பல செயல் இழந்துவிட்டது. எனவே சென்னை வாழ்மக்கள் மற்ற இடங்களில் இருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.எஸ்.என்.எல் ஒரு வாரம் காலத்திற்கு இலவச இணையத்தளச் சேவை மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை அறிவித்தது.

நவம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர். அவர்களின் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 அன்று அரசாங்கம் அனைத்து நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவித்தது.

மூலம்

தொகு
"https://ta.wikinews.org/wiki/2015_சென்னை_பேரழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது