2010 உலகக்கிண்ண கால்பந்து: அர்ஜென்டீனா, சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி

வியாழன், அக்டோபர் 15, 2009


எதிர்வரும் 2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து தேசிய அணியும், அர்ஜெண்டீனா அணியும் தகுதி பெற்றுள்ளன.


தென்ஆப்பிரிக்காவில் வரும் 2010ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் போட்டியில் உருகுவே அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா வெற்றி பெற்றது. தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா-உருகுவே அணிகள் மோதின. இதில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய அர்ஜென்டீனா 1-0 என்ற கோல்கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.


இஸ்ரேல் அணியுடன் நடைபெற்ற தகுதி காண் போட்டியினை சமநிலையில் முடித்துக் கொண்டு புள்ளிகள் அடிப்படையில் சுவிட்சர்லாந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. தாம் கலந்து கொள்ளும் ஐரோப்பிய பிரிவில் 21 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. உலக கால்பந்தாட்ட தர வரிசையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து 15 ஆம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்