1811 இல் தொலைந்த அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

சனி, சனவரி 8, 2011

1811 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க மாநிலமான ரோட் தீவில் மூழ்கிய யூஎஸ்எஸ் ரிவெஞ்ச் என்ற அமெரிக்கக் கப்பலின் எச்சங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக சுழியோடிகள் சிலர் கூறியிருக்கின்றனர். இக்கப்பல் ஒலிவர் பெரி என்பவரின் தலைமையில் இயங்கியது.


யூஎஸ்எஸ் ரிவெஞ்ச் போர்க்கப்பலின் கப்டன் ஒலிவர் பெரி

பிரித்தானியக் கடற்படையினருடனான மோதலைத் தொடர்ந்து இந்தக் கப்பல் ரோட் தீவில் காணாமல்போயுள்ளது. ஒலிவர் பெரி பின்னர் 1813 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கடற்படையினருடன் ஒகையோவில் இடம்பெற்ற சண்டையில் வெற்றி பெற்றார். ரிவெஞ்ச் கப்பல் மூழ்கிய 200 வது ஆண்டு நிறைவு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற விருக்கிறது.


கப்பலின் சிதைவுகளை மீட்பதற்கு இச்சுழியோடிகள் அமெரிக்கக் கடற்படையினரின் உதவியை நாடியுள்ளனர். பிரித்தானியருடன் 1812 இல் ஆரம்பித்த போருக்கு முன்னோடியாக இடம்பெற்ற மோதல் ஒன்றிலேயே ரோட் தீவின் வாட்ச் ஹில் என்ற கரயோரப் பகுதில் இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. ஒகையோ போரின் பின்னர் ஒலிவர் பெரி, "நான் எதிரியைச் சந்தித்தேன், அவர்கள் நம்மவர்களே," எனக்கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலத்துக்குக் கீழ் உள்ள பாறைகள் குறித்தும் சுழியோடிகள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த ஆய்வின் போது கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மூலம் தொகு