அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி

புதன், பெப்பிரவரி 14, 2024

சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது புரோவார்ட் கவுண்டி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள புரோவார்ட் கவுண்டி பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.


இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாசு குரூசு என்று கூறப்படுகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.


பள்ளிக்கூடத்தின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பள்ளி வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர்.


புரோவார்ட் கவுண்டியின் செரிப்பான இச்காட் இசுரேல் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தாக்குதல்தாரி பள்ளிக்கூடத்தில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர் என குறிப்பிட்டார்.


மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.


இந்த தாக்குதலில் சந்தேக நபராக கருதப்படும் குரூசு தாக்குதல் நடந்து அவர் பள்ளி வளாகத்தை விட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பின்னர் காவலில் அழைத்து செல்லப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூலம்

தொகு