வியாழனின் சந்திரனில் ஆழமில்லா ஏரி கண்டுபிடிப்பு

வியாழன், நவம்பர் 17, 2011

வியாழன் கோளின் யூரோப்பா என்ற சந்திரனில் மேற்பரப்பின் கீழ் நீரேரி இருப்பதற்கான சான்ன்றுகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.


யூரோப்பா சந்திரன்

3கிமீ ஆழத்தில் இந்த ஏரிகள் உள்ளதாக நேச்சர் என்ற அறிவியல் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரிட்னி சிமித் என்பவரின் தலைமையில் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. திரவ நிலையில் உள்ள நீர் உயிரினம் இருப்பதற்கான ஆதாரம் ஆகும். கிட்டத்தட்ட 160 கிமீ ஆழமான பெருங்கடல் 10 முதல் 30 கிமீ ஆழத்தில் இருப்பதாக நீண்ட காலமாக ஊகிக்கப்பட்டு வந்துள்ளது.


ஆர்தர் சி. கிளார்க் ஒடிசி 2 என்ற புனைகதையில் வரும் டேவிட் போமன் என்ற பாத்திரம் யூரோப்பாவின் ஆழ்கடலில் நீர்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடித்தார். இதனை உண்மையாக்க அறிவியலாளர்கள் கனவு கண்டு வந்துள்ளனர். இப்போது அமெரிக்க ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீரேரி மூலம் சந்திரனில் இருந்து நீரைப் பெறுவது சாத்தியமாக்கியுள்ளதாக அறிவியலாலர்கள் கருதுகின்றனர்.


யூரோப்பாவுக்கான விண்வெளித் திட்டங்களை 2020களின் ஆரம்பத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆரம்பிக்கவிருக்கின்றன.


மூலம்தொகு