வட கொரிய விமானம் சீனாவில் வீழ்ந்து நொறுங்கியது

புதன், ஆகத்து 18, 2010

வட கொரியாவின் போர் விமானம் என நம்பப்படும் விமானம் ஒன்று சீன-தென் கொரிய எல்லையில் சீனப் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குளானதாக சீன, வட கொரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவ்விபத்தில் கொல்லப்பட்ட விமானி உருசியாவுக்குத் தப்பிச் செல்ல எத்தனித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக யொன்காப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


இவ்விமான விபத்து லயோனிங் மாகாணத்தின் ஃபுசுன் நகரில், எல்லைப்பகுதியில் இருந்து 200 கிமீ தூரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.


வட கொரியர்கள் தமது நாட்டில் இருந்து தப்பிச் செல்வது பொதுவானது எனினும் விமானம் ஒன்றில் தப்புவது அபூர்வம் என செய்தியாளர் தெரிவிக்கிறார்.


சீனாவின் எல்லைப்பகுதியில் சினூஜு என்ற இடத்தில் வட கொரியா தனது வான் படைத்தளத்தை வைத்துள்ளது.


வட கொரியாவுக்குச் சொந்தமான விமானம் தமது பகுதியில் வீழ்ந்துள்ளதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விபத்துக் குறித்து விசாரணைகள் நடைபெறுவதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இவ்விமானச் சிதைவுகளை உள்ளூர் வாசி ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவ்விமானம் மிக்-15 வகை விமானம் என்றும் இவ்வ்விமான வைகள் 1950-53 கொரியப் போரின் போது பயன்படுத்தப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம் தொகு