அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா விருப்பம்
திங்கள், சூன் 17, 2013
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 20 அக்டோபர் 2016: வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
- 16 செப்டெம்பர் 2013: வட கொரியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற நபர் தென் கொரியாவினால் சுட்டுக் கொல்லப்பட்டார்
- 17 சூன் 2013: அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா விருப்பம்
- 11 சூன் 2013: கொரிய தீபகற்பம்: பேச்சுவார்த்தைக்குத் தயார் என இருநாடுகளும் அறிவிப்பு
அமெரிக்காவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமது நாடு தயாராய் உள்ளது என வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் பிராந்தியப் பாதுகாப்புப் பற்றித் தாம் பேச விரும்புவதாக வடகொரியா கூறுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்கா முன்நிபந்தனை எதுவும் விதிக்கக்கூடாது என அதஎச்சரித்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பேச்சாளர், "வடகொரியாவை அதன் நடவடிக்கைகள் மூலமே நாம் அதன் மீது நாம் நம்பிக்கை வைக்கலாம், வெறும் பேச்சுக்களினால் அல்ல," எனக் கூறினார்.
கடந்த வாரம் தென்கொரியாவுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையினை வடகொரியா திடீரென முறித்துக் கொண்டதை அடுத்து வடகொரியாவின் இந்தப் புதிய அறிவிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்துள்ளது.
கொரியத் தீபகற்பத்தில் தற்போது நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளைக் குறைக்கவும், இடைக்கால போர் ஒப்பந்தத்தை அமைதி ஒப்பந்தமாக மாற்றவும், அணுவாற்றல் குறித்து நேர்மையான முறையில் விவாதிக்க விரும்புவதாகவும் வடகொரியா கூறியிருக்கின்றது.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் வடகொரியா தனது மூன்றாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியதை அடுத்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
மூலம்
தொகு- US cool on North Korea talks offer, பிபிசி, சூன் 17, 2013
- White House guarded over North Korea offer of nuclear and security talks, கார்டியன், சூன் 17, 2013