வட கொரிய இராணுவ வீரர் எல்லையைத் தாண்டி தென் கொரியாவுக்குத் தப்பியோட்டம்

சனி, அக்டோபர் 6, 2012

வட கொரிய இராணுவ வீரர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் தாண்டி தென் கொரியாவுக்குள் தப்பி வந்துள்ளார் என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இன்று சனிக்கிழமை பகல் நேரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாதுகாப்புப் படையினரைச் சுட்டுக் கொன்று விட்டே தாம் தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் ஓடி வரும் போது ஆறு சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் தற்போது தென் கொரியப் பாதுகாப்பில் இருப்பதாகவும், தென் கொரிய அதிகாரிகளினால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொதுவாக நில மார்க்கமாக எல்லையை தாண்டுவது மிகவும் அபூர்வம் ஆகும். கடைசியாக 2010 ஆம் ஆண்டில் வட கொரிய வீரர் ஒருவர் தென் கொரியாவுக்குள் நுழைந்தார். கடந்த 60 ஆண்டுகளில் சீனா, தாய்லாந்து, மங்கோலியா போன்ற நாடுகள் ஊடாக தென் கொரியாவுக்குள் கிட்டத்தட்ட 20,000 வட கொரியர்கள் தென் கொரியாவுக்குள் சென்றுள்ளனர்.


1950-53 போரை அடுத்து இரு நாடுகளும் போரின் விளிம்பிலேயே உள்ளன. போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், அமைதி உடன்பாடு எதுவும் நடைமுறையில் இல்லை.


மூலம் தொகு