லெபனானின் முன்னாள் நிதி அமைச்சர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்
வெள்ளி, திசம்பர் 27, 2013
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 27 திசம்பர் 2013: லெபனானின் முன்னாள் நிதி அமைச்சர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்
- 24 சூன் 2013: லெபனானில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 16 படையினர் கொல்லப்பட்டனர்
- 11 மார்ச்சு 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு
- 20 அக்டோபர் 2012: பெய்ரூட் குண்டுவெடிப்பில் லெபனான் புலனாய்வுத் துறைத் தலைவர் உயிரிழப்பு
பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இன்று இடம்பெற்ற ஒரு பெரும் குண்டுத்தாக்குதலில் லெபனானின் முன்னாள் நிதி அமைச்சர் முகம்மது சாட்டா உட்பட ஐவர் கொல்லப்பட்டர். ஐம்பதிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஒரு சுன்னி முசுலிமான முகம்மது சாட்டா முன்னாள் பிரதமர் சாத் ஹரீரிக்கு ஆலோசகராக இருந்தவர். சிரிய அரசுத்தலைவர் பசீர் அல்-அசாத், மற்றும் அவரை ஆதரிக்கும் லெபனானின் சியா எஸ்புல்லா அமைப்பையும் இவர் கடுமையாக விமர்சித்து வந்தவர் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலை எஸ்புல்லா அமைப்பினரே நடத்தியுள்ளதாக சாத் ஹாரீரி குற்ற சாட்டியுள்ளார்.
இன்றைய தாக்குதலில், பெய்ரூட்டின் பல கட்டடங்கள் சேதமடைந்தன. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
2005 பெப்ரவரியில் முன்னாள் பிரதமரும், ஹரீரியின் தந்தையுமான ராஃபிக் என்பவரைக் கொலை செய்தமைக்காக ஐந்து எஸ்புல்லா இயக்கத்தினர் இன்னும் மூன்று வாரங்களில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கின்றனர். இக்கொலையில் தாம் சம்பந்தப்படவில்லை என எஸ்புல்லா அமைப்பு கூறி வந்தது.
எஸ்புல்லா இயக்கத்தினரை ஆதரித்து வரும் ஈரானின் பெய்ரூட் தூதரகம் கடந்த மாதம் தாக்குதலுக்குள்ளானது. சுணி இசுலாமிய இயக்கம் ஒன்று இதற்கு உரிமை கோரியிருந்தது.
மூலம்
தொகு- Beirut blast kills Sunni ex-minister Mohamad Chatah, பிபிசி, டிசம்பர் 27, 2013
- Anti-Assad Lebanese ex-minister killed in Beirut bomb, த ஸ்டார், டிசம்பர் 27, 2013