ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்கி ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

ஞாயிறு, சனவரி 10, 2010


தெற்கு இரசியாவில் கவ்க்காசஸ் மலைகளில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இரசியாவில் கபர்தினோ-பல்கரீயா மாநிலம்

8 மலையேறிகளும் அவர்களது பயிற்சியாளரும் 3,700 மீ (12,140 அடி) உயரமான கெடன்-டாவு என்ற மலைஉச்சியை அடையும் போது பனிச்சரிவு (Avanlanche) ஏற்பட்டது.


உலங்குவானூர்தி மூலம் தேடிய உள்ளூர் தேடுதல் பிரிவினர் பனியில் சிக்கிக் கிடந்த ஐவரினது இறந்த உடல்களைக் கண்டுபிடித்தனர். நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.


ரஷ்யாவின் கபர்தினோ-பல்கரீயா மாநிலத்தின் கவ்க்காஸ் மலைப்பிரதேசத்தில் பனிச்சரிவு ஒரு வழக்கமான நிகழ்வென்றும், இதனை மலையேறிகளும், பனிச்சறுக்கு விளையாடுபவர்களும் அடிக்கடி எதிர்கொள்வர் என்றும் அறிவிக்கப்படுகிறது.


இறந்தவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 20 வயதுடையவர்கள் என்றும் பயிற்சியாளர் 40 வயதுடையவரென்றும் காவல்துறை பேச்சாளர் அலெக் உக்னிவென்கோ தெரிவித்தார். அனைவரும் இரசியர்கள் ஆவர்.

மூலம்

தொகு