ரஷ்யாவில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கேபாப் உணவுசாலைக்கு விற்கப்பட்டது

ஞாயிறு, நவம்பர் 15, 2009


நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவ்வுடலின் ஒரு பகுதியை உண்டுவிட்டு மீதிப் பகுதியை கேபாப் உணவுச் சாலை ஒன்றுக்கு விற்றது தொடர்பாக மூவரை ரஷ்யக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மாஸ்கோவில் இருந்து 1,400 கிமீ தூரத்தில் உள்ள பேர்ம் என்ற நகரில் இம்மூவரும் கைது செய்யப்பட்டனர்.


இந்நிகழ்வு எப்போது நடந்தது என்பது தெரியாவிடினும், மூவருக்கும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கொலை செய்யப்பட்ட மனிதனின் உடல் பேர்ம் நகரில் ஒரு பொது பேருந்து தரிபிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் வெள்ளியன்று அறிவித்தனர்.


மூவரும் அம்மனிதனை கத்திகளாலும் சுத்தியலாலும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவ்வுடலைப் பிய்த்தெடுத்து அதன் ஒரு பகுதியை அம்மனிதர்கள் உண்டதாகவும், பின்னர் மீதப் பகுதியை உணவுசாலைக்கு விற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வுணவுசாலையில் மனித இறைச்சி வேறு யாருக்கும் பரிமாறப்பட்டதா என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை.

மூலம் தொகு