மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்
புதன், பெப்பிரவரி 5, 2014
அமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
- 15 பெப்பிரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
ஐக்கிய அமெரிக்காவின் அமைவிடம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர், சத்ய நாதெல்லா தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். தனது 25வது வயதில் மைக்ரோசாப்ட்டில் சேர்ந்த நாதெல்லா, கடந்த 22 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததற்காக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்நிறுவனத்தை வழிநடத்த சத்ய நாதெல்லாவைவிடச் சிறந்த நபர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்
தொகு- Satya Nadella, மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ இணையதளம், பிப்ரவரி 4, 2014
- Microsoft names Satya Nadella to replace Steve Ballmer, பிபிசி, பிப்ரவரி 4, 2014
- மைக்ரோசாப்ட் சி.இ.ஓ.வாக இந்திய-அமெரிக்கர் சத்யா நாதெல்லா நியமனம், தி இந்து, பிப்ரவரி 4, 2014