மெக்சிக்கோவை இரண்டு பெரும் புயல்கள் தாக்கின, ஏராளமானோர் பாதிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், செப்டெம்பர் 19, 2013

மனுவேல் என அழைக்கப்படும் வெப்பவலயப் புயல் மெக்சிக்கோவின் தென்மேற்கே தாக்கியதை அடுத்து, அதன் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், தற்போது அது முதலாம் தரப் புயலாக தரமுயர்த்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மனுவேல் தற்போது வட-மேற்கு மெக்சிக்கோவை நோக்கிச் செல்வதாகவும், இது மேலும் பெரும் சேதங்களை விளைவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மெக்சிக்கோவின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளை இங்கி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ரிட், மனுவேல் ஆகிய இரண்டு பெரும்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ பு­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­யல்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­கள் தாக்கின. கடந்த ஞாயி­­­றன்று அடித்த புயல் ஏற்­­­படுத்­­­திய சேதத்­­­தில் குரேரோ மாநிலத்தின் பல ஊர்கள் பாதிப்படைந்தன. குறைந்தது 80 பேர் வரையில் உயிரிழததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆங்காங்கே அனைத்து மாகா­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ணங்களி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­லும் நிலச்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ச­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ரி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­வு­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­களும் இடம்பெற்றுள்ளன.


லா பிண்டாடா என்ற கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கிய 58 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோயில், பாடசாலைகள் அழிந்துள்ளன.


காலநிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கெதியிலேயே இடம்பெற்றுவருவதாக உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் உலங்குவானூர்திகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். வீதிகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மின்கம்பிகள் அறுந்துள்ளதால் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறு­­­­­­­களில் வெள்ளம் பெருக்­­­­­­­கெ­­­­­­­டுத்­­­­­­­தோ­­­­­­­டு­­­­­­­கிறது. உள்­­­­­­­ள­­­­­­­டங்­­­­­­­கிய பகு­­­­­­­தி­­­­­­­களில் ஏராளமானோர் சிக்­­­­­­­கி­­­­­­­யுள்­­­­­­­ள­­­­­­­தாக அஞ்சப்­­­­­­­படு­­­­­­­கிறது. அக்காபுல்க்கோ நகரில் சிக்கியிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் இராணுவ உலங்குவானூர்திகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


மூலம்==