மும்பையில் தொடர் மாடிக் குடியிருப்பு இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு
வெள்ளி, ஏப்பிரல் 5, 2013
- 6 பெப்பிரவரி 2016: மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு
- 5 ஏப்பிரல் 2013: மும்பையில் தொடர் மாடிக் குடியிருப்பு இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு
- 21 நவம்பர் 2012: 2008 மும்பை தாக்குதல்: குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார்
- 17 நவம்பர் 2012: சிவசேனா தலைவர் பால் தாக்கரே காலமானார்
- 23 திசம்பர் 2011: மும்பையில் கப்பல் விபத்தினால் கடலில் எண்ணெய்க் கசிவு
இந்தியாவின் வணிக நகரான மும்பைக்கு அருகில் உள்ள தாணேயில் கட்டி முடிக்கப்படாத தொடர் மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை இடிந்து வீழ்ந்ததில் 23 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 60 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்னமும் கட்டி முடிக்கப்படாத இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்னரே பலர் அங்கு குடி புகுந்து விட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டடம் முழுவதும் இடிந்து வீழ்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மும்பையின் புறநகர்ப் பகுதியான தாணேயில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணிகள் நேற்றிரவு முழுவதும் இடம்பெற்றது.
குறைந்தது நான்கு மாடிகள் கட்டி முடிக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் குடி புகுந்துள்ளனர். மேலும் மூன்று மாடிகள் முடிக்கப்பட்டு எட்டாவது மாடி கட்டப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இடிந்து வீழ்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் கட்டடத் தொழிலாளிகள் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில், மகாராட்டிராவில் வாகோலி நகரில் இவ்வாறான கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். கடந்த செப்டம்பரில் புனே நகரில் கட்டடம் இடிந்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களை தேடும் பணி ஏப்ரல் 6 அன்று நிறுத்தப்பட்டது.
மூலம்
தொகு- India building collapse near Mumbai kills 35, பிபிசி, ஏப்ரல் 5, 2013
- dead and 60 injured in Thane building collapse, இந்துஸ்தான் டைம்சு, ஏப்ரல் 5, 2013
- பிபிசி ஏப்ரல் 6 - கட்டட இடுபாடுபவர்களில் சிக்கியோரை தேடும் பணி நிறுத்தம்