மாயன் காலத்து அணைக்கட்டின் பாகங்கள் மத்திய அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
செவ்வாய், சூலை 17, 2012
- 4 மார்ச்சு 2014: குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை
- 9 ஆகத்து 2013: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு
- 22 மே 2013: குவாத்தமாலா இனப்படுகொலை: முன்னாள் தலைவருக்கு எதிரான தீர்ப்பு இடைநிறுத்தம்
- 11 மே 2013: குவாத்தமாலாவின் முன்னாள் தலைவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் 80 ஆண்டுகள் சிறை
- 8 நவம்பர் 2012: குவாத்தமாவாவில் 7.4 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் தலைமையிலான பல்-பல்கலைக்கழக குழு அகழ்வாராய்ச்சி, படிவுகள், மற்றும் படியிடுதல் மூலம் பண்டைய கொலம்பியன் நகரான தீகாலில் மாயன் காலத்துக்குரிய நகரமையம், நிலக்காட்சிமை மற்றும் எந்திரவியல் படிவுகளான பாரிய அணைக்கட்டின் பாகங்கள் என்பவற்றைக் கன்டுபிடித்துள்ளனர்.
260 அடிகளுக்கு மேல் நீளமும், ஏறக்குறைய 33 அடி உயரமும் 20 மில்லியன் கலன்களுக்கும் அதிகளவிலான நீரைத் தேக்கிவைக்கக் கூடிய மனிதனால் ஆக்கப்பட்ட நீர்த்தேக்கத்தையும் கொண்டதாக வெட்டப்பட்ட கருங்கல், சரளைக்கல் மற்றும் மணல் கொண்டு இந்த அணைக்கட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கு குவாத்தமாலாவில் உள்ள தீகால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கட்டமைப்புகள் மாயன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீர் - நிலப் பயன்பாட்டு முறைகள் பற்றியும் சுற்றாடலின் சவால்களையும் பருவகால வரட்சியையும் எதிர்கொண்டு கையாளப்பட்ட இயற்கை வளப் பயன்பாடு பற்றியும் அறியத் தருவதாயுள்ளது.
மூலம்
தொகு- Largest Ancient Dam Built by Maya in Central America, சயன்ஸ் டைய்லி.கொம், சூலை 16, 2012
- Largest ancient dam built by Maya in Central America uncovered, நியூஸ்ரக் இந்தியா.கொம், சூலை 17, 2012
- Archaeologists uncover largest ancient dam built by Maya in Central America இசுகொட் நியூஸ்.கொம், சூலை 16, 2012