குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை
செவ்வாய், மார்ச் 4, 2014
- 17 பெப்ரவரி 2025: குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை
- 17 பெப்ரவரி 2025: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: குவாத்தமாலா இனப்படுகொலை: முன்னாள் தலைவருக்கு எதிரான தீர்ப்பு இடைநிறுத்தம்
- 17 பெப்ரவரி 2025: குவாத்தமாலாவின் முன்னாள் தலைவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் 80 ஆண்டுகள் சிறை
- 17 பெப்ரவரி 2025: குவாத்தமாவாவில் 7.4 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
வட அமெரிக்காவின் குவாத்தமாலாவில் பக்காயா என்ற எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் 3,000 பேர் வரையில் அப்பகுதிய விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்ற சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அருத்து பக்காயா எரிமலை தூசுகளையும், எரிமலைக் குழம்புகளையும் வெளியேற்ற ஆரம்பித்திருந்தது. ஞாயிறன்றும் புதிய வெடிப்புகள் அவதானிக்கப்பட்டன. 4 கிமீ உயரத்திற்கு தூசுகள் கிளம்பின.
பக்காயா எரிமலைப் பகுதி தலைநகர் குவாத்தமாலா நகரில் இருந்து தெற்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விமான சேவைகள் இப்பகுதியில் இருந்து வேறு திசைகளுக்கு மாற்றப்பட்டன.
நடு அமெரிக்கப் பகுதியில் உயிர்ப்புடன் உள்ள மூன்று எரிமலைகளில் பக்காயாவும் ஒன்றாகும். ஏனையவை பியூகோ, சான்டா மரியா என்பவையாகும்.
பக்காயா எரிமலை கடைசியாக சனவரி 2000 இலும், மே 2010 இலும் வெடித்திருந்தது.
மூலம்
தொகு- Thousands in Guatemala facing evacuation as Pacaya volcano erupts, பிபிசி, மார்ச் 4, 2014
- Tourism to Guatemala's famous Pacaya volcano cancelled due to powerful eruption, டெய்லிமெயில், மார்ச் 4, 2014