மனுவேல் நொரியேகா பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டார்

திங்கள், திசம்பர் 12, 2011

பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகா பிரான்சில் இருந்து மீண்டும் தனது நாட்டில் உள்ள சிறைச்சாலைக்கு நேரே அனுப்பப்பட்டார்.


நேற்று ஞாயிறு மாலை இவர் விமானம் மூலம் பனாமா நகருக்கு வந்து சேர்ந்தார். 1980களில் இவர் ஆட்சியில் இருந்த போது நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக இவர் மூன்று மனித உரிமை மீறல்களில் அவர் பனாமாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத நிலையில் ஒவ்வொன்றுக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தன.


77 வயதாகும் நொரியேகா ஏற்கனவே பிரான்சிலும் அமெரிக்காவிலுமாக மொத்தம் 20 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். பிரான்சின் நீதிமன்ரம் சென்ர மாதம் அச்வரை மீண்டும் பனாமாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு அனுமதி அளித்திருந்தது.


பனாமாவில் நொரியேகாவின் பாதுகாப்புக்கு முக்கிய கவம்னம் மேற்கொள்ளப்படும் என பனாமாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரொபர்ட்டோ ஹென்றிகஸ் கூறினார்.


ஜெனரல் நொரியேகா 1983 முதல் 1989 வரை பனாமாவின் தலைவராக இருந்தவர். ஒரு காலத்தின் அமெரிக்காவின் நண்பராக இருந்தவர். 1988 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார். அதன் பின்னர் அவருக்கும் அமெரிக்க அரசுக்கும் இருந்த உறவு முறிந்தது.


அடுத்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை அடுத்து நொரியேகா அங்கு “போர் நிலை”யை அறிவித்தார். பனாமாக் கால்வாயில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும் பனாமாப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை வலுத்தது. அமெரிக்கக் கடற்படை வீரர் ஒருவர் பனாமா நகரில் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து 1990 இல் அமெரிக்கா பனாமாவை முற்றுகையிட்டது. இதையடுத்து வத்திக்கன் தூதரகத்தில் நொரியேகா தஞ்சமடைந்தார். அமெரிக்கப் படைகள் தூதரகத்தின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்ததை அடுத்து 1990 ஆம் ஆண்டு சனவரி 3 ஆம் நாள் நொரியேகா அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். இதையடுத்து அவர் மியாமிக்கு விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுப் பின்னர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு