மத்திய பிலிப்பைன்சில் நிலநடுக்கம், குறைந்தது ஒருவர் உயிரிழப்பு
திங்கள், பெப்பிரவரி 6, 2012
- 9 ஏப்பிரல் 2015: பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலரைக் காணவில்லை
- 10 நவம்பர் 2013: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு
- 15 அக்டோபர் 2013: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
- 7 மே 2013: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு
- 28 ஏப்பிரல் 2013: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் 6.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அருகில் உள்ள நகரங்களில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேகுரோசுத் தீவில் டுமாகெட் நகரில் இருந்து சுமார் 0 கிமீ தொலைவில் காலை 11:49 மணிக்கு 20 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் பதியப்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்குக் கரையிலும், சேபு நகரத்தின் மேற்கிலும் 1 மீட்டர் உயரத்திற்கு ஆழிபேரலை ஏற்படலாம் என பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் அச்சமடைந்து பாடசாலைகளில் இருந்தும், தொழிலகங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். டயாசன் நகரில் வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததினால் குழந்தை ஒன்று இறந்துள்ளதாக உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகரில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்லதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6.7 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த அரை மணி நேரத்துள் 4.8, 5.6 ரிக்டர் அளவுகளில் மேலும் இரண்டு அதிர்வுகள் அமெரிக்க நிலவியல் மையத்தினால் பதியப்பட்டன.
மூலம்
தொகு- At least one dead in central Philippines earthquake, பிபிசி, பெப்ரவரி 6, 2012
- Magnitude 6.7 - NEGROS - CEBU REGION, PHILIPPINES, அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம், பெப்ரவரி 6, 2012