பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
செவ்வாய், அக்டோபர் 15, 2013
பிலிப்பைன்சில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: போர்னியோவில் பிலிப்பீனிய ஆயுதக் கும்பல் மீது மலேசிய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது
பிலிப்பைன்சின் அமைவிடம்
பிலிப்பைன்சின் மத்திய பகுதியை 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன.
போகோல் தீவின் அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இங்கு குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர். அருகில் உள்ளா சேபு தீவில் பல கட்டடங்கள், 16ம், 17ம் நூற்றாண்டு வரலாற்றுப் புகழ் மிக்க தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இவ்விடங்களில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தேசிய விடுமுறை நாளான இன்று காலை 08:12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பாடசாலைகள் எதுவும் இயங்காத படியால் இழப்புகள் பெருமளவு தவிர்க்கப்பட்டன.
மூலம்
தொகு- Deadly Philippine quake hits Bohol and Cebu, பிபிசி, அக்டோபர் 15, 2013
- Scores killed in Philippine quake, ஸ்டார், அக்டோபர் 15, 2013