மதுரையில் மின்தடை நேரம் அதிகரிப்பு, கொசுக்கடியால் மக்கள் தவிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, நவம்பர் 23, 2013

மதுரையில் அறிவிக்கப்படாத மின்தடை நேரம் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 12 மணி நேரம் மட்டுமே மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. கொசுக்கடியால் இரவு தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த சிலஆண்டுகளாக தமிழகத்தில் வரலாற்றில் கண்டிராத அளவுக்கு மின் தடை இருந்தது. குறிப்பாக கோடை காலத்தில் தினமும் 4 மணி நேரம் 20 மணி நேரம் மின் தடை இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயம் முதல் அனைத்துத் தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. சிலமாதங்கள் தொடர்ச்சியாக நீடித்த இந்த மின் தடை, காற்றாலைகளின் மின்உற்பத்தியால் படிப்படியாக குறைக்கப்பட்டது. மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து மின் வெட்டு இல்லாமல் இருந்தது. இதனிடையில், தூத்துக்குடி, வட சென்னை மற்றும் வல்லூர் போன்ற அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்தது, காற்றாலையும் கை கொடுக்கவில்லை, மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் சீராக இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மதுரையில் இரவு, பகல் என மீண்டும் அறிவிக்கப்படாத 12 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது. இரவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கொசுத்தொல்லை அதிகளவு உள்ளது. தூக்கமின்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மூலம்

தொகு