போலந்தின் அரசுத் தலைவராக புரொனிசுலாவ் கொமரோவ்ஸ்கி தெரிவானார்
செவ்வாய், சூலை 6, 2010
- 9 ஏப்பிரல் 2015: ஐரோப்பாவில் நிறுவப்படவிருந்த ஏவுகணைத் தற்காப்புத் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது
- 15 செப்டெம்பர் 2013: போலந்தில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- 23 திசம்பர் 2011: செச்சினியப் பிரிவினைவாதத் தலைவர் போலந்தில் கைதானார்
- 23 திசம்பர் 2011: போலந்தின் அரசுத் தலைவராக புரொனிசுலாவ் கொமரோவ்ஸ்கி தெரிவானார்
- 23 திசம்பர் 2011: போலந்தில் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட 2,000 பேரின் உடல்கள் மீளடக்கம்
போலந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் புரொனிசுலாவ் கொமரோவ்ஸ்கி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளின் படி, பதில் அரசுத்தலைவர் 53.01% வாக்குகளையும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட யாரொசுலாவ் காச்சின்ஸ்கி 46.99% வாக்குகளையும் பெற்றனர்.
கடந்த ஏப்ரம் மாதத்தில் விமான விபத்தில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் லேக் காச்சின்ஸ்கியின் சகோதரர் யாரொசுலாவ் காச்சின்ஸ்கி ஆவார். ரஷ்யாவில் நடந்த வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக போலந்து ஜனாதிபதி விமானத்தில் சென்றவேளை அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஜனாதிபதிப் பதவி வெற்றிடமானது.
கொமரோவ்ஸ்கியின் வெற்றி மூலம் நாட்டில் பிரதமரும், அரசுத் தலைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக வந்திருக்கின்றனர். இதனால் நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரத் தன்மை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார், ஏப்ரல் 10, 2010
மூலம்
தொகு- Bronislaw Komorowski declared president of Poland, பிபிசி, ஜூலை 5, 2010
- Bronislaw Komorowski declared winner of Poland's presidential vote, வாசிங்டன் போஸ்ட், ஜூலை 6 2010