பேச்சு:பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்

  1. இது ஆராய வேண்டிய விசயம் தான்.--Surya Prakash.S.A. 06:06, 14 ஜனவரி 2011 (UTC)
  2. "புதிய இடைமுகப்பு அவசியமாகிறது," என திரு. வேல்ஸ் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது. --P.M.Puniyameen 02:35, 15 ஜனவரி 2011 (UTC)
  3. புதியவர்களுக்கான ஏணி அவசியமே. சில நண்பர்களிடம் தொகுத்தல் பற்றி அறிமுகப்படுத்திய போது, இது தெளிவாகிறது.முன்பு பங்களித்தவரின் தொடர்பு, ஏறக்குறைய இல்லையெனலாம். அதற்குரிய காரணங்களை அவர்கள் உணர்த்தினால், எதிர்காலத்திற்கு அது சிறந்த வழிகாட்டலாக இருக்க வாய்ப்புண்டு. இப்பொழுதுள்ள பங்களிப்பாளர்களுக்கிடைய, வருடம் ஓரிரு முறையாவது சந்திப்பு நிகழ்ந்தால் அதுவும் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.பெரிய கட்டுரைகளில் பல தொகு வருகிறது. ஒருசில மாற்றங்களை மட்டும் செய்யவிரும்பும் நபரொருவர், தொகு வசதியில் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வருகிறது. பக்கத்தின் மேலுள்ள தொகு வசதியை பயன்படுத்தியே மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. என்னைப் போல குறைந்த இணைய இணைப்பில் செயல்படுபவருக்கு இப்பொழுதுள்ள வசதி தொந்தரவாக இருக்கிறது. தமிழகத்தில் இணைய வேகமென்பது பெரும்பாலும் குறைவே. அதிக நபர்களை விக்கிக்கு அழைக்க இதுவும் ஒரு தடைக்கல்லே. இது போல அமைந்தால் நன்றாக இருக்கும். அதாவது வலப்பக்கக் கோடியில் வரும் தொகு வசதி, உட்பிரிவுகளில் தலைப்புக்கு அடுத்து வருதலே சிறந்த பயனளிக்கும். மாகிர் போன்ற தொழில்நுட்ப வல்லுனர் இது குறித்து கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். --த*உழவன் 01:00, 16 ஜனவரி 2011 (UTC)
  4. ...
Return to "பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்" page.