பூமியை ஒத்த கோள்கள் பில்லியன் கணக்கில் உள்ளன, கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், சனவரி 8, 2013

நாசாவின் கெப்லர் தொலைநோக்கி விண்கலம் மேலும் 461 கோள்களைக் கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை நமது பூமியின் பருமனை ஒத்தவையாகவோ அல்லது ஒரு சில மடங்கு பெரிதானவையாகவோ உள்ளன.


கெப்லர் விண்கலம்

கெப்லர் விண்கலம் இதுவரையில் மொத்தம் 2,740 புதிய உலகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 105 கோள்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


ஆறு விண்மீன்களில் ஒன்று குறைந்தது ஆறு பூமியைன் பருமனைக் கொண்ட கோள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் மூலம் விண்மீன் திரளில் இவ்வாறான ஏறத்தாழ 17 பில்லியன் கோள்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


கலிபோர்னியாவில் நடைபெறும் அமெரிக்க வானியல் கழகத்தின் 221வது கூட்டத்தொடரிலேயே இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட கெப்லர் தொலைநோக்கி வானின் ஒரு குறிப்பிட இடத்தில் நிலை கொண்டு ஏறத்தாழ 150,000 விண்மீன்களைத் தனது காட்சிப் புலத்தில் கண்காணித்து வருகிறது. விண்மீன் ஒன்றில் இருந்து வரும் ஒளி அவ்விண்மீனைச் சுற்றி வரும் கோள் ஒன்றினால் மறைக்கப்படும் நிகழ்வை அது கண்காணிக்கிறது.


மூலம்

தொகு