பூமியை ஒத்த கெப்லர்-22பி புறக்கோள் கண்டுபிடிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், திசம்பர் 6, 2011

நமது சூரியனை ஒத்த விண்மீன் ஒன்றைச் சுற்றியுள்ள உயிரினம் "வாழக்கூடிய வலயம்" ஒன்றில் பூமியை ஒத்த புறக்கோள் ஒன்று இருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கெப்லர் 22-பி தொகுதி, எமது சூரியக் குடும்பத்துடன் ஒப்பீடு

கெப்லர்-22பி என்ற இந்தப் புறக்கோள் ஏறத்தாழ 600 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இதன் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 22செ ஆகும். ஆனாலும், கெப்லர்-22பி கோளில் பாறைகளா அல்லது வளிமமா அல்லது திரவமா அதிகமாக உள்ளது என்பது போன்ற விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை.


கெப்லர் விண்கலம் மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் கெப்லர்-22பி உட்பட 54 புறக்கோள்கள் உயிரினம் வாழக்கூடியதாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் கெப்லர்-22பி மட்டுமே முதன் முதலாக வேறு தொலைநோக்கிகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோள் ஆகும்.


கெப்லர் தொலைநோக்கித் திட்டத்தின் முதலாவது அறிவியல் மாநாட்டில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


மூலம்

தொகு