பிலிப்பைன்சில் பேருந்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு

வியாழன், அக்டோபர் 21, 2010

பிலிப்பைன்சின் மிண்டானாவோ என்ற தெற்குத் தீவில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


50 பேர் வரையில் பயணம் செய்த இப்பேருந்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை இத்தாக்குதல் இடம்பெற்றது.


இக்குண்டுவெடிப்பு யாரால் மேற்கொள்ளப்பட்டதென்பது உடனடியாகத் தெரியவில்லை எனினும், இப்பகுதியில் இசுலாமியத் தீவிரவாதிகள், மற்றும் கடத்தல்காரர்கள் பெருமளவு உலவி வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


குறிப்பிட்ட பேருந்து நிறுவனத்திற்கு ஆயுதக்குழுக்களிடம் இருந்து எச்சரிக்கைகள் கடந்த சில நாட்களாக வந்திருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம் தொகு