பிலிப்பைன்சில் இராணுவச் சட்டத்தின் கீழ் பலர் கைது

ஞாயிறு, திசம்பர் 6, 2009


பிலிப்பைன்சில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இராணுவ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு 60 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். வெடிபொருட்கள், வெடிமருந்துகள் பல கைப்பற்றப்பட்டன.


கடந்த மாதம் நடந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் இந்த படுகொலை சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக 57 பேர் ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்த நாட்டின் தெற்கிலுள்ள மாகுவிண்டனாவோ பிராந்தியத்தின் உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து மணிலாவில் உள்ள மத்திய அரசாங்கம் அதிகாரத்தைப் பிடுங்கியுள்ளது.


இந்த ஒட்டுமொத்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் அம்படுவா என்ற செல்வாக்குமிக்க உள்ளூர் ஜாதியினரால் ஒரு கிளர்ச்சி உருவாவதைத் தடுப்பதற்காகவே இராணுவச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது.


1986 ஆம் ஆண்டில் பெர்டினண்ட் மார்க்கோசின் ஆட்சிக்காலத்தின் பின்னர் முதற்தடவையாக இங்கு இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஆயுதக் கும்பலைச் சேர்ந்த 60 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நிறைய வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அம்படுவா சாதியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் காவலில் உள்ளனர்.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு