நைஜீரியாவில் போராளிகளின் தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழப்பு

புதன், சனவரி 23, 2013

வட-கிழக்கு நைஜீரியாவில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.


டம்போவா என்னும் இடத்தில் ஆப்பிரிக்க காட்டிறைச்சி விற்பனையாளர்கள் மீது இசுலாமியப் போராளிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். இசுலாமியர்கள் இவ்வகையான இறைச்சியை உண்பது தடை செய்யப்பட்டுள்ளது.


கானோ என்ற இடத்தில் டிராஃப்ட்சு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


இசுலாமியத் தனிநாடு கோரும் போக்கோ அராம் போராளிகள் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் இவர்களே அங்கு பெருமளவு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 2010 முதல் மத்திய, மற்றும் வடக்குப் பகுதிகளில் போக்கோ அராம் தாக்குதல்களில் 1,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம் தொகு