நைஜீரியாவில் பள்ளிச் சிறுவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்

This is the stable version, checked on 2 அக்டோபர் 2010. Template changes await review.

புதன், செப்டெம்பர் 29, 2010

தென்கிழக்கு நைஜீரியாவில் அபியா மாநிலத்தில் 15 பள்ளிச் சிறுவர்களை துப்பாக்கிதாரிகள் சிலர் பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பன்னாட்டுப் பாடசாலைக்கு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த போதே இவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்திச் சென்றவர்கள் பள்ளி நிருவாகத்திடம் தொடர்பு கொண்டு 20 மில்லியன் நைராக்களை ([$130,000) கேட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகள் அனைவரும் நைஜீரியர்கள் என்றும் அவர்கள் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் 4 முதல் 10 வயதுக்குள் உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் அதிகம் விளையும் நைஜர் டெல்ட்ட பகுதியில் இப்படியான கடத்தல்கள அதிகமாக நிகழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக வசதி படைத்தவர்களும் அவர்களது குடும்பத்தவர்களௌமே கடத்திச் செல்லப்படுகிறார்கள்.


பல நடுத்தர வசதி படைத்த நைஜீரியர்கள் வெளியில் செல்லும் போது தம்முடன் ஆயுதம் தரித்த நபர்களையும் பாதுகாப்புக்காகக் கூட்டிச் செல்லுகின்றனர் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மூலம்