நிலக்கரியை விடக் கருமையான ட்ரெஸ்-2பி புறக்கோள் கண்டுபிடிப்பு

சனி, ஆகத்து 13, 2011

2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரெஸ்-2பி என்ற புறக்கோள் மீண்டும் கெப்லர் விண்கலத்தினால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எமது சூரியக் குடும்பத்தில் காணப்படக்கூடிய கோள்கள், மற்றும் சந்திரன்களை விட இது மிகவும் கருமையானது என்றும், தன் மீது படும் சூரிய வெளிச்சத்தில் ஒரு விழுக்காட்டினை மட்டுமே இது வெளியே தெறிக்கிறது என்றும் அது கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலக்கரியை விட கறுப்பாக இக்கோள் காட்சி தருகிறது. இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது.


ட்ரெஸ்-2பி கோள் வியாழனுடன் ஓர் ஒப்பீடு

“இக்கோள் அசாதாரணமாகக் கருப்பாக இருப்பது எதனால் என்று தெளிவாகத் தெரியவில்லை,” என பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் டேவிட் ஸ்பீகல் தெரிவித்தார். “ஆனாலும், இது முழுமையான கருங்கோள் அல்ல. இது மிகவும் சூடான கோள், இதனால் இது மிக மெலிதான சிவப்பு ஒளிக்கதிரை வீசுகிறது.”


வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார். ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தனது சூரியனில் இருந்து 5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இக்கோள் அதனைச் சுற்றி வருகிறது. 1,000 பாகை செல்சியசை விட அதிகம் சூடானது. வியாழனில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது. ஆனால் ட்ரெஸ்-2பி கோளில் அதன் சூரியனின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை. ஆனால், ஆவியான நிலையில் சோடியம், மற்றும் பொட்டாசியம், வளிம நிலையில் டைட்டேனியம் ஒக்சைடு ஆகியன அதிக அளவில் காணப்படுகின்றன எனத் தெரிகிறது. இவை ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டவை.


ட்ரெஸ்-2பி கோள் பூமியில் இருந்து 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் டிரேக்கோ என்ற விண்மீன் குழுமத்தில் அமைந்துள்ளது.


மூலம் தொகு