நாட்சிகளினால் அபகரிக்கப்பட்ட 474-ஆண்டு பழமையான ஓவியம் உரிமையாளரின் வாரிசுகளிடம் ஒப்படைப்பு

வியாழன், ஏப்பிரல் 19, 2012

இரண்டாம் உலகப் போரின் போது நாட்சிகளால் களவாடப்பட்ட இத்தாலிய யூதர் ஒருவருக்குச் சொந்தமான 474-ஆண்டு பழமையான ஓவியம் ஒன்று அதன் உரிமையாளரின் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


சிலுவையைச் சுமந்து செல்லும் கிறித்து (கிரொலாமோ டி ரொமானி, கிபி 1542)

கிரொலாமோ டி ரொமானியினால் வரையப்பட்ட சிலுவையைச் சுமந்து செல்லும் கிறித்து என்ற ஓவியம் பிரெட்ரிக்கோ ஜெண்டிலி டி சூசெப்பு என்பவரின் கலையகத்தில் இருந்து திருடப்பட்ட 70 ஓவியங்களில் ஒன்றாகும்.


கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிகாரிகளினால் இந்த ஓவியம் கைப்பற்றப்பட்டது. ஜெண்டிலி 1940 ஆம் ஆண்டு காலமானார். இவரது சேகரிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு அரசினால் 1941 ஆம் ஆண்டில் விற்கப்பட்டன.


மிலானில் உள்ள அருங்காட்சியகம் 1998 ஆம் ஆண்டில் இந்த ஓவியங்களை விலைக்கு வாங்கியது. பின்னர் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு ஐம்பதாண்டுகளுக்குக் கடனாக வழங்கப்பட்டன. அதன் பின்னரே இவை திருடப்பட்ட ஓவியங்களென சந்தேகிக்கப்பட்டு இண்டர்போலிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.


ஜெண்டிலியின் பேரப் பிள்ளைகள் 1997 இல் வழக்குத் தொடர்ந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் பாரிசில் உள்ள அருங்காட்சியகம் ஐந்து ஓவியங்களை ஓவியரின் குடும்பத்துக்குத் தந்தது.


மூலம்

தொகு