தெற்கு சூடானில் கால்நடை அபகரிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டனர்
புதன், பெப்பிரவரி 1, 2012
தெற்கு சூடானில் இருந்து ஏனைய செய்திகள்
- 14 சனவரி 2014: தெற்கு சூடானில் இருந்து வெளியேறியோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 200 பேர் வரை உயிரிழப்பு
- 4 சனவரி 2014: தெற்கு சூடான் பேச்சுவார்த்தைகளில் தடங்கல்
- 22 திசம்பர் 2013: தெற்கு சூடானின் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவிப்பு
- 17 திசம்பர் 2013: தெற்கு சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு
- 27 ஏப்பிரல் 2013: தெற்கு சூடான்: முக்கிய போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்
தெற்கு சூடானின் அமைவிடம்
தெற்கு சூடானில் கால்நடைகளை அபகரிப்பதற்காக வாறாப் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்தது 74 பேராக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 45 பெர் பெண்களும் சிறுவர்களும் ஆவர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர்.
யுனிட்டி மாநிலத்தில் சூடானின் அரசுப் படையின் ஆதரவில் இயங்கும் போராளிகளே இத்தாக்குதலை நடத்தியதாக தெற்கு சூடானின் உட்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தெற்கு சூடான் சூடானிடம் இருந்து கடந்த ஆண்டு பிரிந்ததில் இருந்து அங்கு இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை அதிகரித்து வருகிறது.
தெற்கு சூடானில் கால்நடை வளர்ப்பே பெரும்பான்மையோருக்கு வருமானத்தைத் தருகிறது. கடந்த சில வாரங்களாக ஜொங்கிளெய் மாநிலத்தில் கால்நடைகளுக்காக இடம்பெற்றுவரும் சண்டையில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
தொடர்புள்ள செய்தி
தொகு- தெற்கு சூடானில் இனமோதல், பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம், சனவரி 3, 2012
மூலம்
தொகு- South Sudan: Cattle raid in Warrap state 'kills 74', பிபிசி, சனவரி 30, 2012
- Scores dead in cattle raid in South Sudan, ஏபிசி, சனவரி 31, 2012