தானே புயல் புதுவையில் கரையைக் கடந்ததில் பலத்த சேதம்
வெள்ளி, திசம்பர் 30, 2011
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
புதுச்சேரி - கடலூர் இடையே தானே புயல் இன்று காலையில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், புதுச்சேரியிலும், கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த போதிலும், பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவையில் இருவரும், தமிழ்நாட்டில் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை நகரின் அனைத்து் சாலைகளிலும் மரங்கள், மின் கம்பங்கள் பெயர்ந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 15 சமீ மழை பெய்துள்ளது.
ராஜ உடையார் தோட்டம் என்ற இடத்தில் வீட்டின் கூரை சரிந்து விழுந்ததில் அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில், ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.
சென்னை-புதுவை-கடலூர் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்பரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மரம் விழுந்து ஒருவர் அங்கு இறந்துள்ளார்.
தானே புயல் என்பது 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவதும், முதலாவது அதி தீவிரப் புயலும் ஆகும். வங்கக் கடலில் தென் கிழக்குத் திசையில் திசம்பர் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதுடன் அது மெல்ல மெல்ல வலுவடைந்து திசம்பர் 27ம் தேதி புயலாக மாறியிருந்தது.
மூலம்
தொகு- புதுவை அருகே புயல் கரையைக் கடந்தது, தினமணி, திசம்பர் 30, 2011
- தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு, தினமலர், டிசம்பர் 30, 2011
- Cyclonic storm leaves six dead in TN and Puducherry, த இந்து, திசம்பர் 30, 2011
- புதுச்சேரியை புரட்டிப் போட்டுப் போன தானே புயல்- நகரமே வெள்ளக்காடானது- 2 பேர் பலி, ஒன் இண்டியா, திசம்பர் 30, 2011