தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.37 கோடியை எட்டியுள்ளது

சனி, சனவரி 11, 2014

தேர்தலில் வாக்களிக்கும் தகுதியினைப் பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 5.37 கோடியை எட்டியுள்ளது. இத்தகவலை தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.


உலகின் மிகப்பெரியக் குடியரசு நாடான இந்தியாவில் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் இற்றைப்படுத்தப்படுகிறது. மாநிலவாரியாக நடக்கும் இப்பணியானது தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ளது. இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களுக்கு நேற்று செவ்வி வழங்கினார்.


நடப்பு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரி, பட்டியல் குறித்த தரவுகளையும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வயதுவாரியாக வாக்காளர்கள் குறித்த தரவுகள்


மூலம் தொகு