தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது

ஞாயிறு, நவம்பர் 1, 2015

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியதையடுத்து, மாநிலம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த முறை 6 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, அக்டோபர் 28 அன்று இந்தப் பருவம் தொடங்கியது.


இன்று காலை 8.30 மணியோடு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில், அதிகபட்சமாக அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்), காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்), கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்), திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) ஆகிய இடங்களில் 7 செ. மீ. அளவிற்கு மழையளவு பதிவாகியுள்ளது.


நவம்பர் 2 அன்று தென்னிந்தியப் பகுதிகளில் பலத்த மழை இருக்குமென சென்னை வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.

மூலம் தொகு