தமிழகத்தில் தனது கூட்டணியை இறுதிசெய்ய பாஜக மும்முரம்

வெள்ளி, மார்ச்சு 7, 2014

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக தமிழகத்தில் தனது கூட்டணியை இறுதிசெய்வதில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தமிழகப் பிரிவு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.


இந்தியாவின் மக்களவைக்கான பொதுத் தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தமது கூட்டணியை இறுதிசெய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாஜக தமிழகப் பிரிவும் இப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக), பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) ஆகியவற்றுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பாமகவின் ஜி. கே. மணி, இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மாலையில் தேமுதிகவின் அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகளுடன் பாஜக குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


எண்ணிக்கை அடிப்படையிலான தொகுதிப் பங்கீடுகள் குறித்து ஓரளவு முடிவு எட்டப்பட்டுவிட்டது; கட்சிகள் குறிப்பிட்டுக் கேட்கும் தொகுதிகளை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திப் பத்திரிகைகள் கணிக்கின்றன.


மூலம் தொகு